ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டது.
unknown nodeஇதன் பின் கூட்டுறவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில்,ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் .ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் திட்டம் உள்ளதா? என்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த பரிந்துரையை செயல்படுத்துவது தொடர்பாக ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.