சென்னை விமான நிலையத்தில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!!பார்வையாளர்களுக்கு தடை!!

Red Alert warning at Chennai Airport

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

unknown node

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை அழித்தது.

பின்பிப்ரவரி-27 ஆம் தேதிபாகிஸ்தான் விமானப்படை விமானமான  F16  இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை(விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்).

பின்னர் அவர் பாகிஸ்தானிடம் சிக்கியிருந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் மார்ச் 1-ஆம் தேதி விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

அதன்படி மார்ச் 1-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா்.இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதேபோல் அதிதீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.புல்வாமா தாக்குதலை தொடர்ந்து விழிப்புடன் இருக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.