நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாததால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், அரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .உடனே அனைத்தையும் சரிசெய்ய கோரவில்லை, மக்கள் பிரச்னைகளை கேட்டு அவற்றை தீர்க்க வேண்டும் .புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஒரு இரங்கல்கூட தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது.கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.
unknown nodeஸ்டெர்லைட் ஆலை பற்றிய ஆய்வுக்குழுவின் அறிக்கையை பார்த்து சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. எதன் அடிப்படையில் ஆய்வுக்குழு அறிக்கை அளித்தது என்று தெரியவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..