வெளிநாட்டு பணம் மதுரை மாவட்டத்தில் பெருமளவில் கைமாற உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் ரயில் நிலையம் மற்றும், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ரயில் நிலையம் அடுத்த மீனாட்சி பஜாரில் கையில் பெட்டியுடன் கருணாமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார் இதனைப் பார்த்த காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவரை பரிசோதித்த போது பெட்டியில் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பணம் சிக்கியது.
மேலும் இந்த நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணையில் கரன்சிகளை மாறுவதற்கு இன்னும் சிலர் வருவதாக கருணாமூர்த்தி கூறியுள்ளார், இந்நிலையில் அந்த இடத்தில் நிறுத்தி போலீசார் கருணாமூர்த்தியை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர் .
மேலும் நிறுத்திவைத்திவிட்டு காவல்துறையினர் கண்காணித்தனர் அப்பொழுது ராமர், உதயகுமார், ராஜேந்திரன், திருமாவளவன் மகாலட்சுமி என்ற பெண் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.