சங்கராபுரம் பட்டாசு கடை விபத்து – உரிமையாளர் செல்வகணபதி கைது!

Shop owner Selvaganapathi has been arrested in connection with the Sankarapuram firecracker shop blast.

சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்து சம்பவத்தில் கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு கடை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், பாஜக மாவட்ட வர்த்தக அணி தலைவராகிய பட்டாசு கடையின் உரிமையாளர் செல்வகணபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சங்கராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்பொழுது பட்டாசு கடை வெடி விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.