சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது – மருத்துவமனை

The hospital management has now issued a report regarding the health condition of Sasikala who is receiving treatment.

சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 20- ஆம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் அவருக்கு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என்றும் கொரோனா அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலாவிற்கு ஆக்சிசன் கொடுக்கப்படவில்லை என்றும் நேற்று வரை 2 லிட்டர் ஆக்சிசன் கொடுக்கப்பட்டு வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா விடுதலை ஆன நிலையில், சிறை தண்டனை இன்று முடிந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றும் முழுமையாக குணமடைந்த பிறகு சசிகலா தமிழகம் வருவார் என்றும் பிப் 3-ஆம் தேதி சென்னை வருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

unknown node