சாத்தான்குளம் : போலீசாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - சி.பி.ஐ

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூ*கு தண்டனை வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்

Hero Image

சாத்தான்குளம் : தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னதாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாகி ஏப்ரல் 2-அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யாததால், மதுரை நீதிமன்றம் தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

முன்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தண்டனை விவரம் தீர்ப்பு, இன்று அறிவிக்கப்படும் .

வழக்கின் பின்னணி

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கைமதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தண்டனை அறிவிப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சிபிஐ தரப்பில், “இந்த வழக்கு மிகவும் அரிதானது. காவல் துறையினரால் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எதிராக, குற்றவாளிகளின் தரப்பில் தங்கள் குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவற்றை நீதிபதியிடம் எடுத்துரைத்து, தண்டனையை குறைக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, என்ன தண்டனை வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.