திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.

unknown node

இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.அந்த சமயத்தில் அவர் கூறுகையில்,அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டால் போட்டியிடுவேன்.அதுவும் மு.க.ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்  என்று கூறினார்.

அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.