“தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன்;இவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”-முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக உள்ளனர் என்றும் அவர்களை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CII தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில் ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில், அரசின் மின் ஆளுமை நிறுவனம் – சென்னை கணித்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து,கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“எந்த துறையாக இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்தே இயங்கும் சூழல் உள்ளது.ஏனெனில்,தகவல் தொழில்நுட்பம்தான் காலத்தை சுழல வைக்கிறது.இத்தகைய தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்,மேலும்,திமுக அரசு தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது”,என்று கூறிய முதல்வர்,
மேலும்,தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக உள்ளனர்.அவர்களை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.