முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது செருப்பு விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வகையில் அதிமுக கூட்டணியில் தமாக கட்சி உள்ளது.இந்த கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் நேற்று ஒரத்தநாட்டில் தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் முதலமைச்சர் பழனிசாமி. திடீரென அங்கிருந்த கூட்டத்தில் இருந்து ஒரு செருப்பு பறந்து வந்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது விழுந்தது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.மேலும் செருப்பு வீசிய நபர் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.