அரசியலில் ஸ்டாலின் 'லாலிபாப் பேபியாக' ஆகிவிட்டார் – அமைச்சர் ஜெயக்குமார்

Fisheries Minister Jayakumar has said that the DMK will disintegrate after the election and that this will be the last election for the DMK.

தேர்தலுக்கு பிறகு திமுக சிதறி போகும் என்றும் திமுகாவுக்குத்தான் இது கடைசி தேர்தல் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அப்போது, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர், திமுகவை பொறுத்தளவில் கடைசி தேர்தல் இது.ஒரு குடும்பத்துடைய ஆதிக்கத்தை, அவர்களது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

தேர்தலுக்காக ஒவ்வொருவரும் அதை பொறுத்துக்கொண்டு மன உளைச்சலில் உள்ளார்கள். அது எப்போது வெடிக்கும் என்றால், பெரும் தோல்வியை திமுக சந்திக்கும் நேரத்தில் கண்டிப்பாக திமுக சிதறி போகும். அரசியலில் பக்குவப்படாத ஒரு சிறுபிள்ளை தனமாக இருப்பவர்கள் தான் லாலிபாப் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்று தற்போது முக ஸ்டாலினை பொறுத்தளவில் லாலிபாப் பேபியாக அரசியலில் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்துள்ளார்.