ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததால், தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களுக்கு தெரியாது. நாராயணசாமியை தவிர வேறு யாரும் கைதட்டவில்லை. சிலை திறப்பு விழாவுக்கு அழைத்து கழுத்தறுத்தது போன்று உணருகிறார்கள்.ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததால், தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போன்றது. கருணாநிதியின் ஆளுமையுடன் ஸ்டாலின் முன்மொழிவை ஒப்பிட முடியாது.சாடிஸ்ட் என்று சொல்லக்கூடிய வார்த்தை யாருக்கு பொருந்தும்? மு.க.ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக்குதான் ஸ்டாலின் கூறும் சாடிஸ்ட் வார்த்தை பொருந்தும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.