தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி-முதலமைச்சர் பழனிச்சாமி

ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்  பழனிச்சாமி பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில்,நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது .நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி.ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது .தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூனிஸ்ட்  கூட்டணி உள்ளது.  தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கிறார்.செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார் என்று பேசினார்.

தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி-முதலமைச்சர் பழனிச்சாமி