17 பேரின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.நேற்று கோவையில் கனமழையின் காரணமாக ஒரு துயர சம்பவம் அரங்கேறியது.நேற்று அதிகாலை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.நேற்று கோவையில் கனமழையின் காரணமாக ஒரு துயர சம்பவம் அரங்கேறியது.நேற்று அதிகாலை கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த  வீடுகள் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17- பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து பெரும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று  வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.