டிசம்பர்  17-ம் தேதி கரையை கடக்கும் புயல்...!நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் ...!வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி டிசம்பர்  17-ம் தேதி ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்

தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி டிசம்பர்  17-ம் தேதி ஓங்கோல் – காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று புயலாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆயிரத்து 140 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, டிசம்பர்  17-ம் தேதி ஓங்கோல் – காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.