திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (ஆகஸ்ட் 13) ஜீன் ஜோசப் என்கிற மாணவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து, அதற்கு பதிலாக துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தைப் பெற்றார்.
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆளுநர் எதுவும் செய்யாததால் அவர் கையால் பட்டம் வாங்கவில்லை. ஆளுநர் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, இது தனது தனிப்பட்ட முடிவு என்று ஜீன் ஜோசப் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வன்மத்துடன் நடந்து கொண்ட மாணவி ஜீன் ஜோசப்; பெருந்தன்மையுடன் வாழ்த்து சொன்ன ஆளுநர் ஆர்என் ரவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தார். எனினும் ஆளுநர் அதனை பொருட்படுத்தாமல் அந்த மாணவிக்கு வாழ்த்து கூறினார்#rnravi pic.twitter.com/7GaWVRtEg0
— S.BASKAR ( மோடியின் குடும்பம்) (@baskarrss) August 13, 2025
