சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர ஆயுதங்களுடன் மீண்டும் மோதல்!

கல்லூரி மாணவர்கள் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில்,  மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில்,  மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரை அடுத்த கொரட்டுர் ரயில் நிலையத்தில், பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டது.

கற்கள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை கண்டு அச்சம் அடைத்த பொதுமக்கள், கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீஸார், மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராய கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.