பிளாஸ்டிக் பைகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஜூன் 5 ஆம் தேதி 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
unknown nodeஅடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதித்தார் முதலமைச்சர் பழனிசாமி .
unknown nodeஇந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய கோரி பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்ரை தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிளாஸ்டிக் பைகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை இல்லை.அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம் .தமிழக அரசு வெள்ளிக்கிழமை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.