'கூலி’ ரிலீஸ் நாளில் 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.!

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஆக.14 ஆம் தேதி காலை 9 மணி முதல் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Coolie Special Show

சென்னை :நடிகர் ரஜினியின் கூலி படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வெளியீட்டு நாளான ஆகஸ்ட் 14 அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகள் திரையிடப்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 7,500 ஸ்கிரீன்களில் திரையிடப்படவுள்ள கூலி படத்தின் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கிய நிலையில், பல இடங்களில் ஒரு டிக்கெட் ரூ.2,000-க்கு விற்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில், ஆமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 8 அன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது, மேலும் இதுவரை ரூ.2.67 கோடி வசூலித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.