விரைவில் தமிழக அரசின் ஓடிடி ஆப்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை.!

TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கேபிள் டிவியான TAC TV தொடர்பாகவும் , அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் முக்கிய முடிவுகளாக, பிரபல ஓடிடி நிறுவனங்கள் போல, TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், அதே போல மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கபட்டடுள்ளது.

விரைவில், TAC TV ஓடிடி ஆப், எச்.டி செட்டாப் பாக்ஸ் ஆகியவை குறித்த நடவடிக்கை விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.