ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்! தமிழக முதல்வர் இரங்கல்!

Published by
லீனா

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல்.

ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த  மாணவர்கள் படித்துவருகின்றனர்.  இந்நிலையில், அங்குள்ள வால்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சென்று குளித்துள்ளனர். அப்போது, ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சக தமிழக மாணவர்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேலும் மூன்று மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த  சம்பவத்தில், உயிரிழந்தவர்கள், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் என தெரியவந்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள், 4 பேரின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்புக் கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த உத்தரவின் பேரில், தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள்மேற்கொண்டு வருகின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

45 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

1 hour ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

4 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

5 hours ago