தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் – வானிலை மையம்..!!

The Meteorological Department has warned that the temperature will rise in 4 districts of Tamil Nadu.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். ஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.