எனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்த பிரதமருக்கு நன்றி – முதல்வர் பழனிசாமி உரை

Chief Minister Palanisamy has said that the corona has been brought under control in India by Prime Minister Modi's move.

பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்க நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் பழனிசாமி அளித்தார். இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி பேசுகையில், எனது அழைப்பை ஏற்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என்றும் கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழரின் பொறியியல் பெருமையை உலகுக்கு பறைசாற்றுகிறது கல்லணை எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் மமுதல்வர் பேசியுள்ளார்.