சுகாதார சேவையை வழங்குவதில் தமிழகம் இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. சுகாதார சேவையை வழங்குவதில் தமிழகம் இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு அதிகளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.