அதிமுக கூட்டணி 40 தொகுகளிலும் வெற்றிபெற பாஜக பாடுபடும்- ஹெச்.ராஜா

This news gives information about The AIADMK will win in 40 constituencies

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக கூட்டணி 40 தொகுகளிலும் வெற்றிபெற பாஜக பாடுபடும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தலையொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில்  உள்ள பாஜகவில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் கூறுகையில்,   பாஜகவின் மெகா கூட்டணியால் ஸ்டாலினின் முதல்வர் ஆசை பொய்த்துப்போனது. அதிமுக கூட்டணி 40 தொகுகளிலும் வெற்றிபெற பாஜக பாடுபடும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.