மக்கள் நலனுக்காக ஆயிரம் முறை பாஜகவிற்கு அதிமுக அடிமையாக இருக்கும் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் .உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்க

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் .உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்க வந்தவர்கள் யார் என்பதும், உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும்.ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தமிழகத்தில் 39 தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார்.மக்கள் நலனுக்காக ஆயிரம் முறை பாஜகவிற்கு அதிமுக அடிமையாக இருக்கும் .மக்கள்நல திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ள அதிமுகவை பாஜகவின் அடிமை என்று கூறுகின்றனர் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.