எய்ம்ஸ் மருத்துவமனை இனி அம்மா  எய்ம்ஸ்  மருத்துவமனை என்று அழைக்கப்படும்...!அமைச்சர் உதயகுமார்

மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா  எய்ம்ஸ்  மருத்துவமனை என்று அழைக்கப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா  எய்ம்ஸ்  மருத்துவமனை என்று அழைக்கப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம்  தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

unknown node

இது தொடர்பாக  மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலில் , எய்ம்ஸில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 இடங்கள், நர்சிங் படிப்புக்கு 60 இடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது .மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 15 முதல் 20 வரையிலான சிறப்பு மருத்துவ பிரிவுகள் மற்றும் 750க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளது. 45 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும்  என்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

unknown node

இந்நிலையில்  தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா  எய்ம்ஸ்  மருத்துவமனை என்று அழைக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை வருவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்றும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.