தொகுதி பங்கீடு குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் –  திருநாவுக்கரசர்

கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.

கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன்  ஆலோசனை நடைபெற்றது.

தொகுதி பங்கீடு குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக முன்னாள்  காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு பங்கேற்றனர்.

இதன் பின்னர் தமிழக முன்னாள்  காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில், அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள்.தொகுதி பங்கீடு குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக முன்னாள்  காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.