விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைப்படுத்த கோரி தனியார் மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.அதில்,சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை.வரைமுறைப்படுத்த கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை.மேலும் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.