தென்தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு...!சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

unknown node

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில்லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தற்போது மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்துள்ளது.