நூறுநாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை-முதல்வர்

This news gives information about The chief minister is to step up a hundred day program to 200 days-nuru nall vellai thidathai

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் தமிழகத்தில் தொழில் வளம், விளைச்சல் அதிகரித்து உள்ளது எனவும்  நூறு நாள் வேலை திட்டத்தை  200 நாட்களாக திட்டமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் தமிழகத்தில் தொழில் வளம், விளைச்சல் அதிகரித்து உள்ளது எனவும்  நூறு நாள் வேலை திட்டத்தை  200 நாட்களாக திட்டமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.