திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

This news is gives the information about The DMK alliance is like a divergent bird - Minister Jayakumar

திமுகவில் முக்கிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-விடுதலை சிறுத்தைகள் கட்சி-இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் திமுக கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்எ.அவர் கூறுகையில், திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது.மக்கள் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறவே ரூ.2000 வழங்கப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.