பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இரண்டுகட்டமாக தினகரன் வெளியிட்டார்.
அதேபோல் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் நீலகிரி தொகுதி வேட்பாளரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,மத்தியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது என்று தெரிவித்துள்ளார்.