இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்.... இந்திய வானிலை ஆய்வு மையம்..!

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  இந்த பருவகாலம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், வடக்கு மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்.... இந்திய வானிலை ஆய்வு மையம்..!