விருதுநகர் அருகே இருதரப்பு இடையே பயங்கர மோதல் ...!10க்கும் மேற்பட்டோர் காயம்..!வாகனங்களுக்கு தீவைப்பு ...!

விருதுநகர் அருகே இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பளாக்கரை கிராமத்தில்

விருதுநகர் அருகே இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பளாக்கரை கிராமத்தில் கோயில் யாருக்கு சொந்தம் என்று வாக்குவாதம் தொடங்கியது .பின்னர் ஒரு தரப்பு கோவிலுக்கு பூட்டு போட செல்லும்போது மற்றொரு தரப்பு அவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதலை தொடர்ந்தனர்.பின்னர் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதல்  வலுவடைந்தது .இந்த மோதலால்  அங்கிருந்த வாகனங்கள் மீது தீவைக்கப்பட்டது.மேலும் மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.