குறையவே குறையாது...மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 26, 2025) மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கம் கண்ட தங்கம் விலை, கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப் பிரியர்கள் மற்றும் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “இனி நகையே வாங்க முடியாதா” என்ற கவலை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

நேற்று (டிசம்பர் 25) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கும் விற்பனையான நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.10,760-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.86,080-க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,54,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள், முதலீட்டு தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

இந்த தொடர் விலை உயர்வு திருமணங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. சந்தை ஆய்வாளர்கள் அடுத்த சில நாட்களில் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர். இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு தொடரும் போக்கு நீடிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.