பிரதமர் தற்போது தமிழகம் வருவதற்கு தேர்தல்தான் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் அழைப்பு குறித்து இப்போது தெரிவிக்க முடியாது .பேரிடர்களின்போது வராமல் பிரதமர் தற்போது தமிழகம் வருவதற்கு தேர்தல்தான் காரணம், மக்கள் அல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.