பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஆபத்து....திருமாவளவன் கருத்து...!!

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர்

அதிமுக தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட்டது .

கூட்டணி குறித்து விடுதலை சிறுத்த கட்சி திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக + பாமக + பிஜேபி கூட்டணி அமைக்கின்றது .

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,காங்கிரஸ் இடம்பெறக்கூடிய கூட்டணிகள் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு ஆபத்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஜனநாயகத்துக்கு ஆபத்து ஆகவே சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வர விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகின்றது என்று அவர் தெரிவித்தார்.