கீழ்பவானி ஆற்றின் நீர் வரத்து அதிகமாகி கொண்டே இருப்பதால் அணை எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என தஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை வரத்து காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே உள்ள கீல்பவானி அணையின் நீர்மட்டம் உயர்நது கொண்டே வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .