இன்று நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு-குடியரசு துணைத்தலைவர் ,மத்திய அமைச்சர் பங்கேற்பு

உலக முதலீட்டாளர் மாநாட்டை  துவக்கிவைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு

புரிந்துணர்வு ஒப்பந்தம்

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை

உலக முதலீட்டாளர் மாநாட்டை  துவக்கிவைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு:

தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

பின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை:

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழில்துறை அமைச்சர் சம்பத்  சந்தித்து,  முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு  அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் இருவரும் இன்று கலந்து கொள்ள உள்ளனர்.