சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

By

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரூ.11.98 கோடி மதிப்பில்  உள்ள சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவுற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்ததோடு, ரூ.152.67 கோடி மதிப்பில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசுகையில் ,”இந்த நாட்டில் வேகமாக நகர மயமாகும் மாநிலங்களின் பட்டியல்களில் நம் தமிழ்நாடு தான் முதலிடம் வகித்து வருகிறது. மிக முக்கியாயமாக, சென்னை நகரம் இன்றைக்கு விரிவடைந்துக் கொண்டே இருப்பது போல,  சென்னையின் வசிக்கும் மக்கள்தொகையும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.  சென்னை மாநகராட்சியும் இந்த வளர்ச்சிக்கேற்ப சிறப்பாக செயல்பட்டுக் கொணடே தான் இருக்கிறது.

சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது, இதனால் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழல் உருவாகியுள்ளது. மேம்பால பணிகள் நம்  திராவிட மாடல் ஆட்சியில் ஒரு முழு வேகத்தை ஏற்படுத்தி உள்ளன. மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மேம்பாலப் பணிகளை முடித்து அதை திறந்தும்  வைக்கப்பட்டுள்ளது.

சென்னையை முன்னேற்ற இந்த  திட்டங்களை நம் தமிழக முதல்வர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் தற்போது ஏற்பட்ட வெள்ளம்  போல ஒரு மிகப்பெரிய வெள்ளம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது. அந்த நேரம் சென்னை நகரமே ஒரு பத்து, பதினைந்து நாட்கள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து போனார்கள்.

ஆனால், இந்தமுறை பெய்த மழையில் இருந்து நாம் வெறும் இரண்டே நாட்களில் மீண்டு வந்து விட்டோம். இதற்கு காரணம் சென்னை மாநகராட்சியில் செயல்படும், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களின் பங்குதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது”. என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய நிகழ்ச்சியில் பேசினார்.

Dinasuvadu Media @2023