இந்தியாவில் நடக்ககூடாதது நடந்துவிட்டது! தமிழ் மண்ணில் தாமரை மலராது! திருமாவளவன் பேட்டி!
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அதனால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினை பலரும் வாழ்த்தி வருகின்றனர்,
இந்நிலையில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை வந்துள்ளார். இவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ‘ குளம் குட்டையில்தான் தாமரை மலரும். தமிழ் மண்ணில் மலராது. இந்திய அளவில் நாம் எதிர்பார்க்காதது நடந்துவிட்டது. நடக்ககூடாதது நடந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக நிற்காமல் இருந்ததால் வாக்குகள் சிதறி இவ்வாறு ஆகிவிட்டது.
மத வெறியர்களும், சாதி வெறியர்களும் இங்கே தொறக்கடிக்க பட்டுள்ளனர். என்னை வீழ்த்துவதற்கு 50 முதல் 100 கோடி வரை பேரம் பேசப்பட்டது. ஆனால் சிதம்பரம் மக்கள் என்னை ஜெயிக்க வைத்துவிட்டனர். என்னை குறிப்பிட்ட சாதிக்கு எதிரானவன் போல சித்தரித்து வந்தனர். அந்த அவதூறு தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மக்களுக்கு எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன்.\
DINASUVADU