, ,

உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.! பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்.!

By

2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது. 

இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும்.

இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். அதே போல சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப தரிசனத்தை நேரில் காண திருவண்ணாமலைக்கு சுமார் 10 லச்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர்.

ஓம் நமசிவாய என பக்தர்கள் கோஷம் முழங்க 2,668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.

 

Dinasuvadu Media @2023