இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார் – பிரேமலதா விஜயகாந்த்

This time, Modi will come as Prime Minister - Premalatha Vijayakanth

இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார், தமிழகத்தின் தேவைகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவோம், திருப்பூரில் இருந்து  தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.