இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960...அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை ஆகி வருகிறது.

gold price tn

சென்னை:இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. இடையில் சற்று இறங்கி மக்களுக்கு சமாதானம் கொடுத்தாலும், சில நாட்களில் புதிய உச்சத்தை உருவாக்கி நகை வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த ஏற்ற இறக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது, இதனால் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

சென்ற மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்தில், 22 கேரட் சவரன் தங்கம் விலை ரூ.73,000 அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரூ.75,000-ஐ கடந்தது. அடுத்த நாள் ரூ.75,200, பின்னர் ரூ.75,760 என்று புதிய சாதனைகளைப் படைத்தது. இந்த விலை ஏற்றம், திருமணமும் பண்டிகையும் நெருங்கும் நேரத்தில் நகை வாங்குவோரை பெரிதும் பாதித்தது. கடந்த வார தொடக்கத்தில் சற்று இறங்கியது,

மேலும், செவ்வாய்கிழமை ரூ.640 குறைந்தது, புதன்கிழமை ரூ.40 இறங்கி சவரன் ரூ.84,320 ஆனது. ஆனால், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மீண்டும் உயர்ந்தது.இன்று (அக்டோபர் 14, 2025) சென்னை தங்கச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரன் விலை ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-ஆக விற்பனையாகிறது.

அதைப்போல, ஒரு கிராமுக்கு ரூ.245 ஏற்றம் அடைந்து ரூ.11,825 க்கு விற்பனை ஆகி வருகிறது. இந்த உச்ச விலை, சந்தையை மீண்டும் சலசலப்படுத்தியுள்ளது.

விரிவான விலை விவரங்கள்:24 கேரட் ஆபரணத் தங்கம்: ஒரு கிராம் ரூ.11,869- சவரன் ரூ.94,95218 கேரட் ஆபரணத் தங்கம்: ஒரு கிராம் ரூ.9,015- சவரன் ரூ.72,120

தங்கம் விலை இன்று உயர்ந்தது போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.163, ஒரு கிலோ ரூ.1,63,000-க்கு விற்பனை. இந்த ஏற்றம், உலகளாவிய சந்தை அழுத்தங்கள், அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் இந்தியாவில் திருமண சீசன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.