LGBTQIA குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி – தமிழக அரசு
மருவிய பாலினத்தவர் மற்றும் எல்ஜிபிடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி.
LGBTQIA மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றமதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கொள்கை இன்னும் 3 மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. இதன்பின்னர் LGBTQIA சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.