நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு...!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான  இடங்களில்  தஞ்சமடைய  வேண்டும். பெரும்பாலான  பகுதிகளில்  மின்  இணைப்பு  துண்டிக்கப்படும் .தமிழகத்தில்  25 சென்டிமீட்டருக்கு  மேல்  மழை பெய்யும் ,அதேபோல்  கடல்  அதிக  சீற்றத்துடன்  காணப்படும்  ,இதனால் மீனவர்கள்  கடலுக்கு  செல்ல  வேண்டாம்  என்றும்  எச்சரிக்கை  விடுத்துள்ளது  இந்திய  வானிலை  ஆய்வு மையம்.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவோரை மீட்க படகுகள் தயார் நிலையில் உள்ளது.மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.