தவெக தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் – விஜய்.!

மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டை பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி நேரலையில் பார்த்து மகிழ வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TVK Maanadu

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21ம் தேதி அன்று நடைபெறவுள்ள கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து தொண்டர்களுக்கு இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”அவர் மாநாட்டிற்கு வருவதற்கு முன்பும், மாநாடு முடிந்து ஊர் திரும்பும்போதும் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்குமாறு தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டிற்கு வராமல், வீட்டில் இருந்து நேரலையில் காணுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விஜய் தனது கடிதத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சி என்ற உன்னதமான அரசியல் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். உங்கள் விஜய் உரிமையுடன் அழைக்கிறேன், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். மதுரை மாநாட்டிற்கு வரும்போதும், செல்லும்போதும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.

தவெக தகுதியும் பொறுப்பும் மிக்க ஒரு அரசியல் கட்சி என்பதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும். கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மாநாட்டுக்கு வர வேண்டாம். 1967, 1977 தேர்தலில் ஏற்பட்ட வெற்றி விளைவுகளை 2026 சட்டமன்ற தேர்தலிலும் காணப்போகிறோம்” ன்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.