சென்னை :உபர் (Uber) செயலியில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி ஆகஸ்ட் 2025 இல் தொடங்கப்பட்டது, இதன்மூலம் பயணிகள் உபர் செயலியைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோவிற்கான QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம்.
இந்த சேவை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) உடனான கூட்டாண்மையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. டெல்லியை தொடர்ந்து சென்னை மெட்ரோ டிக்கெட்டுகள் ஊபர் செயலி மூலம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயில் டிக்கெட்டில் ஆகஸ்ட் 31 வரை 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது ஊபர் செயலி. ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே இனி மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
உபர் இந்த சேவையை 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மேலும் மூன்று மெட்ரோ சேவைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வசதி தற்போது சென்னை மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மட்டுமே உள்ளது. மற்ற நகரங்களுக்கு விரைவி ல் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
