’இந்தியா’ கூட்டணி வென்றால் ரூ.500கு சமையல் எரிவாயு – உதயநிதி

Udhayanidhi Stalin: 'இந்தியா’ கூட்டணி வென்றால் சமையல் எரிவாயு விலை ரூ.500-க்கு விற்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

Featured image

Udhayanidhi Stalin: ‘இந்தியா’ கூட்டணி வென்றால் சமையல் எரிவாயு விலை ரூ.500-க்கு விற்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, “ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை. நீட் தேர்வால் இதுவரை 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதற்கு மத்திய பாஜக அரசும் அப்போதைய அதிமுக அரசும் தான் காரணம். கொளுத்தும் வெயிலிலும் என்ன காண வந்துள்ள தாய்மார்களாகிய நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்? தமிழகம் வரும் அவர் தமிழ் தமிழ் என்று பேசுவார். திருக்குறள் பேசுவார். அது பாதி பேருக்கு புரியவும் புரியாது.

இந்த பிரசாரத்தின் நோக்கமே ‘மாநில உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்’ என்பதுதான். சி.ஏ.ஜி., 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு வெளியிடும். அதில் மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு செலவு கணக்கு காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பணம் எங்கு போனது என யாருக்கும் தெரியவில்லை, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ்செல்வனை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெல்லும் பட்சத்தில் மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்” என பேசினார்.